Ku Ka Selvam

selதிரு.கு.க. செல்வம் அவர்கள் பிறந்தது முதல், கோடம்பாக்கம், வடபழனி பகுதியில் வசித்து வருகின்றார். கடந்த 45 ஆண்டுகளாக ஆற்றி வரும், சமூகப் பணி, கழகப்பணிகள் மூலம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். சென்னை வடபழனியில் உள்ள அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயலாளராக 2009ம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 7 ஆண்டுகளாக, மன்றத்தின் பணிகளின் குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளாக UPSC மற்றும் TNPSC வகுப்புகளில் 200 மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர். மேலும் இதுவரை 175 பேர்கள் அரசு வேலை வாய்ப்புப் பெற்று உள்ளனர். சிறப்பு குரூப்-4 தேர்வில் சுமார் 12 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்ற திருமதி B. சரண்யா அவர்கள் நமது பயிற்சி மையத்தில் பயின்றார் என்பது குறிப்பிடதக்கது.

6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை நடைபெறும் இரவுப் பள்ளியில் (டியுசன்) தினசரி 80 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளாக தளபதி அவர்களின் திருக்கரத்தால் ஊக்கத்தொகை பெற்று உள்ளனர்.

தினசரி 100 பெண்கள் தையற் பயிற்சி வகுப்பு மூலம் பயன் அடைகின்றனர். மற்றும் சுய தொழில் செய்ய காலை, மாலை இருவேளைகளில் வெளியில் இருந்து துணிகளை எடுத்து வந்து மன்றத்தில் உள்ள தையல் இயந்திரத்தில் துணிகளைத் தைத்துக் கொள்வதின் மூலமாக சுமார் 15 பெண்கள் வருவாய் பெற்று பயன் அடைகின்றனர்.

மேலும், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இரவு 7 மணி முதல், 8 மணி வரை கணினிப் பயிற்சி வகுப்பில் தினசரி சுமார் 30 மாணவ மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

சனி, ஞாயிறு ஆகிய இருநாட்கள், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி நடைபெற்று வருகின்றது.

கடந்த 7 வருடங்களாக வெள்ளிக் கிழமைதோறும் இலவச மருத்துவமுகாமின் மூலமாக ஆயிரக்கணக்கானவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

வருடத்தின் 365 நாட்களும் காலை 10 மணி முதல் 12 மணி வரை பொது மக்களுக்கு மன்றத்தின் நுழைவு வாயிலில் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.

24 மணி நேரமும் தூய்மைப்படுத்தப்பட்டட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

உடற்பயிற்சிக் கூடம், இளைஞர்களுக்காக காலை, மாலை இருவேளையும் செயல் பட்டு வருகின்றது.

நூலகத்தில் சுமார் 7000 புத்தகங்கள் உள்ளன. தினசரி, காலை, மாலை அனைத்து தமிழ், ஆங்கில தினசரி பத்திரிக்கைகள் படிப்பதற்கு உள்ளன.