இலவச வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு கருத்தரங்கு முகாம்

படித்து முடித்த பட்டதாரிகள், 12 மற்றும் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு கருத்தரங்கு முகாம் வருகின்ற 23.07.2016(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, 4வது குறுக்கு தெரு (டென்னிஸ் விளையாட்டு திடல் எதிரில்) அமைந்துள்ள ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடை பெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஆளுமைக் குறிப்பு (Bio-Data) உடன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

89 நபர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் 89 நபர்களுக்கு 20.07.2016 அன்று மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி.

அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயல்பாடுகள்

கடந்த 1 1/2 வருடமாக சனி, ஞாயிறு நாட்களில் தளபதி மு.க.ஸ்டாலின் TNPSC பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இரவுப்பள்ளி, கணினிப் பயிற்சி மற்றும் ஆங்கில பயிற்சியில் நாள் ஒன்றுக்கு 150 மாணவ – மாணவியர்கள் படித்து பயனடைகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு 400 நபர்களுக்கு மேல் தையல் பயிற்சி, உடல் பயிற்சி, வாசகர்கள் பயனடைகிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் 120 நபர்களுக்கு மேல் மருத்துவமுகாமில் பயனடைகிறார்கள்.

முதன்மை தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்

அகில இந்திய ஆட்சி (IAS – IPS)  பணிக்கான முதன்மை தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடங்கி உரையாற்றியவர்கள்.

  • திரு. D. சந்திரசேகரன் (IAS ஓய்வு)
  • திரு. P. பாஸ்கரன் IPS