தலைவர் கலைஞர் அவர்களின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு 11.06.2016 அன்று ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்ட 89 நபர்களுக்கு, இன்று(20.07.2016) என் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் சா.கணேசன் முன்னிலையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சைதை தொகுதியினுடைய சட்ட மன்ற உறுப்பினருமான ம.சுப்பிரமணியம் அவர்கள் பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடியை வழங்கினார்.
இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் வருகின்ற 25.06.2016 சனிக்கிழமை காலை 10மணிக்கு மன்ற வளாகத்தில்(வடபழனி) துவங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளவும்.
படித்து முடித்த பட்டதாரிகள், 12 மற்றும் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு கருத்தரங்கு முகாம் வருகின்ற 23.07.2016(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, 4வது குறுக்கு தெரு (டென்னிஸ் விளையாட்டு திடல் எதிரில்) அமைந்துள்ள ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடை பெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஆளுமைக் குறிப்பு (Bio-Data) உடன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் 89 நபர்களுக்கு 20.07.2016 அன்று மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி.